வழக்கறிஞர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் தம்மைப் பற்றி அவதூறு பரப்புவதாக நடிகை பார்வதி புகார் அளித்துள்ளார். எர்ணாகுளம் அடுத்த திருவோட்டு காவல் நிலையத்தில் நடிகை பார்வதி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் வழக்கறிஞர் என தம்மை கூறிக்கொள்ளும் கிஷோர் குமார் என்பவர் தமது குடும்பத்தை பின் தொடர்வதாகவும், இணைய பக்கங்களில் தம்மைப் பற்றி அவதூறு பரப்புவதாக கூறியுள்ளார். இதுதொடர்பான செல்போன் ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இயக்குனர் ஒருவரால் தாம் மிரட்டப்பட்டதாக நடிகை மஞ்சுவாரியார் விவகாரத்தை தொடர்ந்து, நடிகை பார்வதியும் புகார் அளித்துள்ளது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்!