தமிழகத்தில் எனக்கு பாதுகாப்பில்லை;ஊழலை ஒழிப்பேன்

மாடல் அழகியும் நடிகையுமான மீராமிதுன் ஊழலை அழிக்கப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சர்ச்சை பேச்சுகளால் பிரபலமான நடிகை மீரா மிதுன் தமிழ்நாட்டில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனக்கு எதிராக பெரிய கும்பலே செயல்படுகிறது என கூறியதுடன் போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு வழக்கு போடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டது. இந்தநிலையில் ரமணா படத்தில் வரும் ஊழல் தடுப்பு அமைப்பு போன்று ஆன்டி கரப்சன் கமிஷன் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பின் தமிழக இயக்குனராக மீராமிதுன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் குணப்படுத்த முடியாத நோயாக இருக்கும் ஊழலை சரி செய்வேன் என கூறியுள்ள மீராமிதுன் ஒரு நடிகையாக இருக்கும் தமக்கே அநீதி இழைக்கப்படுகிறது என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்று யோசித்து பாருங்கள் எனவும் கூறியுள்ளார்.


Leave a Reply