கமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க ஸ்டாலின்!

அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் கமலஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

 

இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டானியம் கம்பி வைக்கப்பட்டது. அவரது காலில் இருந்த கம்பி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து அங்கு ஓய்வு எடுத்து வந்த கமலஹாசனை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன் சுபவீரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Leave a Reply