ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றாலும் முகவரி ஆதாரத்திற்கு இன்றியமையாததாக உள்ளது. ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், கைபேசி எண், மின்னஞ்சல், முகவரி, கருவிழி, கைரேகை ஆகியவற்றை மாற்றலாம்.
பாஸ்போர்ட், பான் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை முகவரி மாற்றத்திற்கு காண்பிக்கலாம் .மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகளையும் பெயர் அல்லது முகவரி மாற்றத்திற்கு வழங்கலாம்.
சமையல் எரிவாயு இணைப்பு ரசீது, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி ஆதார் கார்டு திருத்தத்தை மேற்கொள்ளலாம். தபால் நிலையம், சில வங்கி கிளைகள், இ சேவை மையங்களில், ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேவையான ஆவணங்களோடு சேர்த்து 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் புதிய ஆதார் அட்டை கோரியோ, பிழை திருத்தம் செய்யவோ விண்ணப்பிக்கலாம். www.uidai.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆதார் மையங்களின் விவரங்களை அறியலாம்.
வங்கி கணக்கு, பான் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் உள்ளது போன்றே ஆதார் அட்டையில் பெயர் இருக்க வேண்டியது அவசியம். பெற்றோரின் ஆதார் அட்டையை வைத்து குழந்தைகளுக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். புதிய ஆதார் அட்டை அல்லது மாற்றப்பட்ட ஆதார் அட்டையை விண்ணப்ப எண்ணை வைத்து இணையதளத்திலேயே பதிவிறக்கலாம்.