அத்துமீறலில் ஈடுபடவே உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல்

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அத்துமீறலில் ஈடுபடலாம் என்ற நோக்கிலேயே உள்ளாட்சியில் அதிமுக அரசு மறைமுக தேர்தலை அறிவித்து இருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் உள்ளாட்சிதேர்தல் இனி தள்ளிப்போகும் சூழல் இல்லாததால் தேர்தலை எதிர்கொள்ள பயந்து அதிகார அத்துமீறலுக்காக தனது முடிவையே எடப்பாடிபழனிசாமி மாற்றிக்கொண்டது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

 

மறைமுகத் தேர்தல் என்ற பெயரில் உள்ளாட்சி தேர்தலை சர்வாதிகார முறையிலேயே நடத்த பார்க்கிறார்களே தவிர நேர்மையாக நடத்திட அதிமுக அரசு அச்சப்படுவதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் திமுகவால் தான் நல்லாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதால் அதை நிறைவேற்ற மக்கள் பிரச்சினைக்காக திமுக தொண்டர்கள் போராட வேண்டுமென ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


Leave a Reply