டயானாவின் நீலநிற கவுன் மீண்டும் ஏலம் : விலை எவ்வளவு தெரியுமா?

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் நீல நிற கவுன் மீண்டும் ஏலம் விடப்பட உள்ளது. இங்கிலாந்து வரலாற்றில் டயானா என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. புன் சிரிப்பான முகத்துடன் உலகத்தையே தனது வசீகரத்தால் ஈர்த்தவர் தான் அவர்.

 

1997 ஆம் ஆண்டு நேரிட்ட டயானாவின் மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டயானாவுக்கு மிகவும் பிடித்தமான அவரது உடை மீண்டும் ஏலம் விடப்பட உள்ளது. 1985ஆம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகருடன் நடனம் ஆடிய போது டயானா அணிந்திருந்த நீலநிற வெல்வெட் கவுன் தான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

 

தமக்கு மிகவும் பிடித்தமான இந்த உடையை முதன் முறையாக ஆஸ்திரேலிய பயணத்தில் 1986 ஆம் ஆண்டு அணிந்து இருந்தார் டயானா. 1997 ஆம் ஆண்டு சுய உருவப்படம் வரைவதற்கும் டயானா தேர்வு செய்தது இந்த நீல நிற கவுனை தான். இந்த நிலையில் தான் மரணமடைவதற்கு முன்பு 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக நீல நிற கவுன் ஏலத்திற்காக கொடுத்திருந்தார் டயானா.

ஃப்ளோரிடாவை சேர்ந்த மவுரிண்ட் டிங்கேள் என்பவர் இந்த கவுனை 92 லட்சத்து 72 ஆயிரத்து 900 ரூபாய்க்கு வாங்கினார். 2013-இல் நடைபெற்ற இந்த ஏலத்தில் பிரிட்டன் தொழிலதிபர் ஒருவர் இரண்டு கோடியே 22 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு இந்த கவுனை பெற்றார்.

 

அதன் தொடர்ச்சியாக கெரி டிரைலர் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ஏலத்தில் டயானா அணிந்திருந்த அந்த நீல நிற கவுன் விரைவில் மீண்டும் ஏலத்திற்கு வருகின்றது. இதன் ஆரம்ப விலையாக 3 கோடியே 24 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நீல நிற கவுனை ஏலத்தில் கைப்பற்ற போவது யார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Leave a Reply