--- --:--:-- --

“கண்ணால் காணக் கூடிய கடவுள் ‘இயற்கை’ தான்”:நடிகர் விவேக்

9

திரைப்பட நடிகர் விவேக் தமது பிறந்த நாளையொட்டி நீலகிரியில் பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் பள்ளியில் தனது பிறந்த நாளையொட்டி நடிகர் விவேக் மாணவ-மாணவிகள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்.

 

பின்னர் அதிகம் மழை தரக்கூடிய சோலை மரக்கன்றுகளை மாணவர்களுடன் இணைந்து நட்டார். பின்னர் பேட்டியளித்த விவேக் இயற்கை தான் கடவுள் என்றும் அதனால் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை சாலையோரங்களில், வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தமிழகத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய நீலகிரி மலைத்தொடர் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon