தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை!

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

பருவமழை காலங்களில் வட கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதக போக்கின் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 20ம் தேதி முதல் தெற்கு தீபகற்ப இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply