5 குறள்களை 5 நிமிடத்தில் கூறினால் அரை பிளேட் பிரியாணி

திண்டுக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐந்து திருக்குறள்களை ஒப்புவிக்கும் குழந்தைகளுக்கு தனியார் உணவகம் சார்பில் அரை பிளேட் பிரியாணி வழங்கப்பட்டது.

 

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. உலக உணவு தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் பழைய ஐந்து பைசாவிற்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்பட்டது.

 

அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த உணவகம் புதிய சலுகையை அறிவித்தது. அதன்படி ஐந்து நிமிடத்தில் ஐந்து திருக்குறளை ஒப்புவிக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காளான் பிரியாணி பரிசாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது.

 

இதையடுத்து பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் திருக்குறளை ஒப்புவித்து பிரியாணியை வாங்கி சென்றனர்.


Leave a Reply