சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து செயல்படாமல் போனாலும், அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சந்திராயன் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்புவது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மூன்று விஞ்ஞானிகள் குழுக்கள் இந்த சந்திராயன்-3 திட்டத்தில் கை கோர்த்துள்ளன. சந்திராயன்-2 இல் உள்ள ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதால் சந்திராயன்-3 விண்கலத்தில் லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே அனுப்பப்பட உள்ளன.
இந்த திட்டம் அடுத்த நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3ன் மூலம் அனுப்பப்படும் விக்ரம் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்த கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறமையுடனும் வடிவமைக்கப்பட உள்ளது.
இதனால் ஆர்பிட்டரை விட்டுப் பிரியும் போது அது அதிக வேகத்தில் நிலவில் விழுந்தாலும் அதன் கால்கள் உடையாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுவட்டப்பாதையில் எண்ணிக்கை 6 லிருந்து 3 அல்லது 4 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்திரனின் -2 இல் சூரியத் தகடு மூலம் இயங்கக்கூடிய வடிவில் உருவாக்கப்பட்டது. ரோவர் தற்போது எரிபொருள் மூலம் இயங்க கூடிய வகையில் உருவாக்கப்பட உள்ளது. இதனால் அதன் ரோவர் விரைவில் செயலிழக்காமல் அதன் ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திராயன் 2-ல் பின்னடைவாக கருதப்பட்ட அனைத்து அம்சங்களையும் மாற்றியமைத்து சந்திரன் 3 திட்டத்தை செயல்படுத்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி நிச்சயம் வெற்றியடையும் என நம்பலாம்.