அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.க்கு விருந்து அளித்த இந்திய அதிகாரிகள்

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று இருக்கும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ நகரின் இந்திய தூதரக அதிகாரிகள் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரி சுதாகர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ஓபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார்.

 

முன்னதாக துணை முதல்வருக்கு சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் தங்க தமிழ்மகன் விருது வழங்கப்பட்டது.இதில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, உலகத் தமிழ் பேரவை தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Leave a Reply