காவல் துறையினர் எனக் கூறி செல்போன் பறிப்பு!

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் காவல்துறையினர் எனக்கூறி இரண்டு பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே நேற்று இரவு வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த இருவர் வாலிபரிடம் தாங்கள் போலீசார் என கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்தவர்கள் அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

 

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


Leave a Reply