அமெரிக்க பயணத்தில் ரைசிங் ஸ்டார் விருது பெறவிருக்கும் ஓபிஎஸ்

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நாளை மறுநாள் முதல் 17-ம் தேதி வரை அமெரிக்கா நாட்டில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிகாகோ, ஹூஸ்டன் வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

 

வரும் எட்டாம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து புறப்படும் ஓ பன்னீர்செல்வம் ஒன்பதாம் தேதி அன்று மாலை சிகாகோ நகரில் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்.

 

அதனைத் தொடர்ந்து பத்தாம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் ஆஃப் தி இயர் – ஆசியா அவார்ட் விருது வழங்கப்படுகிறது. 12ஆம் தேதி சிகாகோவில் நிறுவனங்கள் தொடர்பான வட்டமேசை கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அவர் 13-ம் தேதியன்று வாஷிங்டன் டீசி செல்கிறார்.

பதினான்காம் தேதி ஹூஸ்டன் நகருக்கு செல்லும் அவர் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக தொழில்முனைவோர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதனை தொடர்ந்து பதினைந்தாம் தேதி ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைகாண எலக்ட்ரானிக்ஸ் டோனர் போர்ட் தொடக்கி வைக்கிறார்.

 

16ஆம் தேதி நியூயார்க் சென்று அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்யும் விழாவில் பங்கேற்கும் அவர் 17ஆம் தேதி சென்னை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply