தனது பிறந்தநாளில் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேனர் வைக்க வேண்டாம் என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் தனது பிறந்தநாளையொட்டி நாளை பரமக்குடியில் தன்னுடைய தந்தையின் உருவ சிலையை திறக்க உள்ளதாக கூறியுள்ளார்.
அதில்தான் பங்கேற்க உள்ளதாக குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் பேனர் மற்றும் கொடிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வரவிருக்கும் மாற்றங்களை நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.