--- --:--:-- --

நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படவுள்ள மத்திய அரசின் சிறப்பு விருது

7

நடிகர் ரஜினிகாந்திற்கு கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அறிவித்த மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசின் சார்பில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வந்தது.

 

ஆசியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழாவான இந்த நிகழ்வு கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நிரந்தரமாக கோவாவில் நடத்தப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளை கடந்து இவ்வாண்டு பொன்விழா ஆண்டு விழாவாக வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் 28ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

 

இந்த விழாவில் திரைத்துறைக்கு சிறந்த பங்களிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு ஐகாநாஃப் கோல்டன் ஜூபிலி விருது வழங்கப்படுகிறது. இதை டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விருதை ஏற்றுக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததாக பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.

 

அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.இது ரஜினிகாந்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் முதல் விருது அல்ல. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த 45 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆளுமை பெற்றவர் என்ற சிறந்த விருது ஏற்கனவே ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon