தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகா புயல் கோவாவிற்கு தென்மேற்கே 310 கிலோமீட்டர் தொலைவிலும், மங்களூரில் இருந்து வடமேற்கே நானூற்றி 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறும் மகா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாளாவில் 6 சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply