--- --:--:-- --

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 63 வயது முதியவர் கைது

images

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 63 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது ஆறு வயது மகள் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வீட்டினை சேர்ந்த 23 வயதான கருப்பையா என்பவர் அந்த சிறுமியிடம் மிட்டாய் தருகிறேன் டிவி பார்க்கலாம் என்று கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவிக்கவே அவர்கள் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கருப்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon