இந்தியாவில் ஊடுருவல் இதற்காக 500 தீவிரவாதிகள் எல்லையில் தயாராக இருப்பதாக இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். சர்ஜிகல் தாக்குதல் என்பதை தாண்டி பதிலடி இருக்கும் என்ற ராணுவ தளபதி எச்சரிக்கை இந்தியாவிற்குள் அனுப்பப்படும் ஒரு தீவிரவாதி கூட திருப்பி செல்ல முடியாது என்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு இவை அனைத்தும் ஒரே கேள்வியை நோக்கி சாதாரண குடிமகனை தள்ளுகிறது.
எல்லையில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அந்தக் கேள்வி. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஊடுருவல் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று செய்தி வந்து கொண்டே இருக்கிறது. எல்லையில் போர் மேகத்தை தவிர்க்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானை ஒருசேர எச்சரித்துள்ளனர்இந்திய ராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும்.
இந்தியாவிற்குள் ஊடுருவ தவறுக்காக சுமார் 500 பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாகவும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் செய்வதற்காகவே எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் எச்சரித்திருக்கிறார் பிபின் ராவத். இதனையடுத்து இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் முறியடிக்க உள்ளதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத். சிங் காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது என்றும் 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் செய்த தவறை இந்தியா மீண்டும் செய்ய கூடாது எனவும் எச்சரித்து உள்ளனர்.