சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோகிணி திரையரங்கத்தில் குறைந்தபட்ச கட்டணமாக 40 ரூபாயும் அதிகபட்சமாக 100 ரூபாய் மட்டுமே அரசாணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆன்லைனில் கடை குட்டி சிங்கம் படத்தின் முன்பதிவு செய்த தேவராஜ் என்பவரிடம் டிக்கெட் கட்டணமாக 150 ரூபாயும் முன் பதிவு கட்டணமாக 35 ரூபாய் 40 பைசாவும் வசூலிக்கப்பட்டுள்ளது.
100 ரூபாய் டிக்கெட்டுக்கு 150 ரூபாய் வசூலிக்கப்பட்டு தொடர்பாக தேவராஜ் சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். விசாரணைக்குப் பின் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது 10 ரூபாயையும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக பத்தாயிரம் ரூபாயும் வழங்க ரோகிணி திரையரங்கம் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.