பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரமடைந்துள்ளன. பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் அடுத்த மாதம் மாமல்லபுரம் வருகிறார்கள். அங்கு இவர்கள் சுற்றி பார்க்க இருக்கும் கடற்கரை கோவில் ஐந்து ரதம் பகுதிகளின் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பெட்டி கடை வியாபாரம், பூக்கடை, டிபன், சாப்பாடு, இளநீர் என பல வகைகள் நடத்தி வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி மாமல்லபுரம் வந்த தலைமை செயலர் சண்முகம் அந்த கடைகளை அகற்றி சுத்தப்படுத்தி உத்தரவிட்டார். இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் கடைகளை மூடி நாட்களுக்குள் அகற்றும்படி கடை நடத்துவோருக்கு அறிவுறுத்தினர். அதன்படி இன்று அனைவரும் கடைகளை அகற்றினர் அடுத்தமாதம் 13ம்தேதி வரை கடைகள் வைக்கக் கூடாது எனவும் பேரூராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. இதுதவிர மாமல்லபுரத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.