யானைகளை கொன்று தந்தங்களை விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மேட்டுப்பாளையத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மூன்று ஆண் யானைகளும் சிறுமுகை வனப்பகுதியில் ஒரு யானையும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு அதன் தந்தங்கள் கடத்தப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனத்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம் மற்றும் குபேந்திரன் ஆகிய இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் ஒன்பது காட்டு யானைகள் வேட்டையாடப்பட்ட தெரியவந்தது.
மேலும் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பாபு ஜோ யானை வேட்டை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பாபுஜி தீவிரமாக தேடி வந்த வனத்துறையினர் குற்ற வழக்கில் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அவரை கைது செய்தனர்.






