பாரத பிரதமரின் 69வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் அரசு மருத்துவமனையில் ரத்ததான நிகழ்ச்சி !!!

பாரத பிரதமரின் 69வது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும், சசிகுமாரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் பிறந்தநாள் விழா கோவை மாவட்ட பாஜக சார்பில் உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் பிரதமர் மோடியின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும், சசிகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டியும் மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இளைஞரணி மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் முன்னிலையில் தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினார்கள். இதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக இளைஞரணி சார்பில் ரத்ததானம் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், மதன்மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுண்டம்பாளைய மண்டல தலைவர் அசோக்குமார் ஏற்பாடு செய்தார்.


Leave a Reply