கள்ளக்குறிச்சியில் நடிகர் சூர்யாவின் அறிவுறுத்தலை ஏற்று காப்பான் பட கொண்டாட்டத்தில் பேனர் வைப்பதைத் தவிர்த்து சூர்யா ரசிகர்கள் படம் பார்க்க வந்த மக்களுக்கு விதை பந்துகளை வழங்கி அசத்தினார். சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்த பேனர் விழுந்து மின்பொறியாளர் சுபஸ்ரீ மரணமடைந்ததை அடுத்து கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என திரைநட்சத்திரங்கள் பலர் வலியுறுத்தினர்.
தனது படம் வெளியீட்டின்போது பேனர் வைக்க கூடாது என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யாவும் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று காப்பான் படம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்ட போது அதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அந்த கொண்டாட்டங்களின் பேனர்கள் இடம்பெறவில்லை.
பேனருக்கு படம் பார்க்க வந்த மக்களுக்கு விதைப்பந்துகள் வழங்கி சூரிய ரசிகர்கள் மகிழ்ந்தனர். விதைப்பந்து இயக்கத்துடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு சூர்யா ரசிகர்கள் பத்தாயிரம் விதை பந்துகளையும் 500 மரக்கன்றுகளையும் திரைப்படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு வழங்கினர்.