பிரபல நடிகர் நாகார்ஜுனா விற்கு சொந்தமான இடத்தில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊரில் 40 ஏக்கர் விளை நிலத்தை நாகர்ஜுனா வாங்கினார். இந்த மாத முதல் வாரத்தில் நாகார்ஜுனாவின் மனைவியான அந்த நிலத்தைச் சென்று பார்வையிட்டார்.
இயற்கை விவசாயம் செய்யும் பொருட்டு மண்ணின் தன்மை குறித்து ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை அனுப்பி வைத்தார். அந்த குழுவானது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது துர்நாற்றம் பேசியது இடத்தின் அருகே இருந்த பழைய பொருட்கள் அறையில் பார்த்தபோது மனித எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் எலும்புக்கூட்டை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க கருதப்படும் நபர் ஆறு மாதத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். உயிரிழந்த நபர் குறித்தும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






