புதிய மோட்டார் வாகன சட்டத்தை செயல்படுத்தக் கூடாது : லாரி உரிமையாளர்கள்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. அதிகரிக்கப்பட்ட இன்சூரன்ஸ் கட்டணம் சாலை வரி அபராத கட்டணம் ஆகியவை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன் பின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் சுங்கச்சாவடி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டினார்.

 

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக இன்சூரன்ஸ் கட்டணம் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென லாரி சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் ஆயிரக்கணக்கான லாரிகள் இயங்கவில்லை. இதனால் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply