மின்சாரம் தாக்கி பலியான சேதுராஜ், தீனா குடும்பத்திற்கு தலா 3 லட்ச ருபாய்

சென்னையில் உயிரிழந்த சிறுவன் தீனா மற்றும் சேது ராஜ் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தீனாவும் தாம்பரத்தில் சிட்லபாக்கம் சேதுராஜ் உயிரிழந்த சம்பவம் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

 

இருவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தீனா மற்றும் சேது ராஜ் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply