திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் கலப்பட டீ தூள்!

திருப்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் கலப்பட டீத்தூள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தாமஸ் புரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஒரு டன் அளவிலான கலப்பட டீத்தூள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கி டீத்தூள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சீல் வைத்தனர்.


Leave a Reply