மீண்டும் பேனர் விழுந்து ஏற்பட்ட அசம்பாவிதம்!

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கிய இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சோகம் மறைவதற்குள் அதே சாலை அருகே 60 அடி பேனர் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பள்ளிக்கரணையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முகப்பில் 60 அடி நீளம் கொண்ட எல்இடி பேனர் வைக்கப்பட்டிருந்தது.

 

அடுக்குமாடி குடியிருப்பின் பெயரைக் கொண்டிருந்த அந்த பேனரை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பேனர் சாய்ந்து விழுந்தது இந்த விபத்தில் ராஜேஷ் என்ற ஊழியர் பலத்த காயம் அடைந்தார் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply