அரசு மருத்துவர் எனக்கூறி ரூ.12 லட்சம் ஏமாற்றி பணம் பறித்த மருமகன் கைது

அரசு மருத்துவர் என கூறி பெண்ணை திருமணம் செய்து 12 லட்சம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் தேடி கைது செய்திருக்கிறார்கள். முகத்தை மூடிக்கொண்டு காவல்நிலையம் வந்தவருக்கு இடி போல் விழுந்தது தர்ம அடி. இவரின் பெயர் கார்த்திக். விரிவாக்கத்தை சேர்ந்த இவருக்கு கடந்த 11ஆம் தேதி தான் திருமணம் நடந்தது மாமியார் வீட்டில் இருந்து விழுந்து செல்லவேண்டிய கார்த்திக் மோசடி புகார் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டது தான் இவ்வழக்கின் முக்கிய திருப்பம்.

 

அரசு மருத்துவர் என்ற பெயரில் வலம் வந்த கார்த்திக்கிற்கு அப்பகுதியை சேர்ந்த செவிலியர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். கார்த்திக்கின் குணநலன்கள் பிடித்துப்போகவே தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருக்கிறார். அவருடைய பெற்றோர் இல்லை எனக் கூறிய பரிதாபத்தை ஏற்படுத்தியது. கார்த்திக்கிற்கும் அந்த பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு நடந்திருக்கிறது.

 

அதன் முக்கிய விஷயம் என்னவென்றால் 75 சவரன் தங்க நகைகளும் 12 லட்சம் ரூபாய் பணமும் வரதட்சணையாக தர முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பணத்தை வாங்கிக்கொண்டு கடந்த 12-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாரானார் நல்லவர் போல் நடிப்பது அவரின் சுயரூபம் வெளிப்பட்டது. ஏற்கனவே 12 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்ட அவர் மாமியாரிடம் மேற்கொண்டு பணம் கேட்டு நிரூபித்துள்ளார்.

 

அவரின் நோக்கம் முழுவதும் பணத்தின் மேல் இருந்ததால் மாமியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விசாரணை நடத்திய போது கார்த்திக் மருத்துவர் அல்ல ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரியவந்தது. கோவையை போது கார்த்திக் சென்னையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து உள்ளார்.

 

ஏதோ சில பிரச்சனைகள் காரணமாக இரண்டாமாண்டு அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த தொடர்புகளை வைத்துக் கொண்டுதான் அரசு மருத்துவர் என கூறி ஏமாற்றி விட்டதாக தெரிகிறது. காவல்துறை சினிமா ஹீரோ போன்ற தோற்றம் சொகுசு கார் அரசு பணியாளர்களுக்கான முத்திரைகளை போடுவதால் கார்த்திக் மீது பெண் வீட்டாருக்கு சந்தேகம் எழவில்லை. விசாரணை செய்த காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply