ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி வைகோ ஆட்கொணர்வு மனு

ஜம்மு-காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வை கண்டுபிடிக்க கோரி வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 மத்திய அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

 

முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவரது மகன் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வை கண்டுபிடித்து தர கோரி வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை என்றும், வருகிற 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அண்ணா மாநாட்டுக்கு அப்துல்லாவுக்கு அழைப்பிதழ் தர வேண்டும் என்பதால் அவரை கண்டுபிடித்து தருமாறு வைகோ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். வைகோவின் ஆட்கொணர்வு மனு விரைவில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply