இஸ்ரோவுடன் இணைய உள்ள நாசா!

சூரிய மண்டலம் தொடர்பான ஆராய்ச்சி இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் நிலவை தொடை 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சமயத்தில் விக்ரம் லண்டனில் சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 

சிக்னலை பெறுவதற்கான முயற்சியை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில்தான் நிலவின் சுற்று வட்ட பாதையில் சுற்றி கொண்டிருக்கும் ஆர்பிட்டால் விக்ரமின் அவரை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

இஸ்ரோவின் இந்த முயற்சியை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்நிலையில் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறங்க இஸ்ரோ மேற்கொண்ட கடும் முயற்சியை நாசா பாராட்டியுள்ளது. விண்வெளி பாதை மிகவும் கடினமானது என தெரிவித்துள்ளனர். திட்டமிட்ட இஸ்ரோவின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

 

மேலும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் சூரிய குடும்பம் தொடர்பான விண்வெளி ஆராய்ச்சியில் நிலவு தொடர்பான ஆராய்ச்சியிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கு ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்த இஸ்ரோ கௌரவப்படுத்தி உள்ளது. இதேபோல் இஸ்ரோவின் முயற்சிகளை அர்ப்பணிப்பையும் ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி மையமும் பாராட்டியுள்ளது.

 

கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு நாடுகள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட நிலவுப் பயணத் திட்டங்களை 40 விழுக்காடு தோல்வியடைந்து இருப்பதாக அமெரிக்காவின் நாசா புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


Leave a Reply