சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீது சக மாணவன் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள கூடலூரை சேர்ந்தவர் முத்தமிழன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல நாகை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த மாணவி ஒருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நியாயம் கேட்க சென்ற முத்தமிழ் என்னிடம் அம்மாணவி செருப்பை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன் கழிவறையை சுத்தம் செய்ய சில எடுத்த மாணவி மீது வீசியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உத்தமனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.