வீடுகளின் முன்பு ரத்தம் தெளித்து செல்லும் மர்ம நபர்கள்! மக்கள் அச்சம்!

மதுரை பாலமேடு அருகே இரவுநேரங்களில் வீடுகளின் முன் ரத்தம் தெறித்து செல்லும் மர்ம நபர்களால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பெரியகுளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு மர்ம நபர்கள் சிலர் ரத்தத்தை எடுத்து விட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

 

இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Leave a Reply