சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்ததாக கருத முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இவற்றில் பதிவிட்டுள்ள அவர் எந்த ஆராய்ச்சியிலும் கற்பதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் இது கற்றலுக்கான பொன்னான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் விஞ்ஞானிகளின் மனதைரியத்தை பாராட்டுவதாகவும், நிலவைத் தொட முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி நமது விண்வெளி திட்டங்களில் புதிய உச்சம் இனிதான் வரவுள்ளதாக கூறினார்.






