ஃபேஸ் புக் மூலம் திருமணமான பெண்ணை காதலித்தவர் மாயம்! கள்ளக்காதலி மேல் குற்றச்சாட்டு!

பொன்னமராவதி சேர்ந்த கல்லூரி மாணவரை மலேசியாவைச் சேர்ந்த திருமணமான பெண் கடத்திச் சென்றதாக மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பொன்னமராவதி பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டபிரபு கல்லூரியில் படித்து வருகிறார்.

 

இந்நிலையில் மலேசியாவில் வசித்து வரும் பிரியா என்ற திருமணமான பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. மணிகண்டபிரபு தன்னைவிட 15 வயது வயது அதிகமான திருமணமான பெண்ணை காதலித்து வந்ததை அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மலேசியாவிலிருந்து வந்த பிரியாவும், மணிகண்டனும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனையறிந்த மணிகண்ட பிரபுவின் பெற்றோர் பிரியா தங்களது மகளை கடத்தி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மணிகண்டன் பிரியாவை தேடி வருகின்றனர்.


Leave a Reply