ஹரியானாவில் தொடர்ந்து தர்மபுரியில் பால் ஏடிஎம்யை நிறுவியுள்ளார் பட்டதாரி ஒருவர். கறந்த பால் என்பது காலை, மாலை என இரு நேரங்களில் மட்டுமே கிடைக்கும் பொருளாக இருந்தது. இதன் காரணமாக அவசர தேவைகளுக்காக கறந்த பால் கிடைக்காதவர்கள் பாக்கெட் பாலை நோக்கி நகர ஆரம்பித்தனர்.
ஆனால் 24 மணி நேரம் கறந்த பால் கிடைக்கும் வகையில் பால் ஏடிஎம்யை தருமபுரிக்கு நிறுவியிருக்கிறார் பட்டதாரி இளைஞர் ஒருவர்.முருகன் என்பவர் என்னுடைய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த முயற்சி மூலம் அதே தரத்துடன் சரியான விலையில் நுகர்வோருக்கு தர முடியும் என்கிறார் முருகன்.
எந்திரம் குறித்த தேடலின் போது டென்மார்க்கில் இருப்பதை கண்டறிந்து, இந்தியாவில் ஹரியானா பீர்பாலிடம் இருப்பது தெரிய வந்ததாகவும் கூறுகிறார்.300 லிட்டர் கொள்ளளவு இரண்டு நாட்கள் பதப்படுத்தும் வசதியும் கொண்டது இந்த பால் ஏடிஎம் பத்து ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என பணத்தை நாணயமாகவும் அல்லது ரூபாய் நோட்டுகளாக, அதற்கேற்ற பாலை நுகர்வோர் தாமாகவே பெற்றுக்கொள்ளலாம்.
ஏடிஎம் போன்ற அட்டைகளைப் பயன்படுத்தும் வசதியும் இருப்பதால் எந்த நேரமும் கறந்த பாலை பெரும் வசதி இருப்பதாக கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.