திருமணம் முடிந்த கையுடன் நீர்நிலைகளை தூர்வார நிதி வழங்கிய தம்பதி!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமணம் முடிந்த கையுடன் அந்த கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக மக்கள் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மாவட்டத்தில் கொத்தமங்கலம், கீரமங்கலம், மாங்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் நீர்நிலைகளை சொந்த முயற்சியில் இளைஞர்கள் தூர்வாரி உள்ளனர்.

 

இந்நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த அன்புமணி ,சுசித்ராவின் திருமண விழா இன்று நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் புதுமண தம்பதியினர் கிராமத்து இளைஞர்களை அழைத்து நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக தங்கள் சார்பில் 5 ஆயிரம் ரூபாயை தங்கள் பங்களிப்பை வழங்கினார்.


Leave a Reply