லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இடத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே பூண்டி கிராமத்தில் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்தார் .
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தண்ணீர் இல்லாததால் கடந்த சில வருடங்களாக தரிசாக போட்டு வைத்திருந்தார். இந்நிலையில் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான சுப்பிரமணி என்பவர் அந்த இடத்தை ஆக்கிரமித்த தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் தண்டபாணி கேட்டபோது 10 லட்சம் ரூபாய் தந்தார்கள் அதை கொடுத்து விடுவதாகவும் சுப்பிரமணிசாமி கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து தண்டபாணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தனது நிலத்தை மீட்டு தருமாறு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.






