மனைவி இறந்த துக்கத்தில் தானும் தற்கொலை செய்து கொண்ட முதியவர்!

வயதான முதியவர் ஒருவர் மனைவி தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாளாமல் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் பகுதியை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் என்பவர் மனைவி சாரதா உடன் வசித்து வந்துள்ளார்.

 

தனித்து வசித்து வந்த இருவரும் அப்பகுதியில் கம்பங்கூல் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி இருவரும் இடையே நிகழ்ந்த குடும்ப தகராறு வீட்டை விட்டு வெளியேறிய சாரதா இரு நாட்களாக வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் சாரதாவை மிதப்பதாக முதியவர் கிருஷ்ணருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இதனை அடுத்து அங்கு சென்ற கிருஷ்ணனும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Leave a Reply