திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் தனுஷ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வடபழனியில் அசுரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற படத்தின் நாயகன் தனுஷ் வடசென்னை படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என கேட்பதாகவும், ஆனால் தாங்கள் எதையும் எதிர் பார்த்த படங்களை எடுப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்களுக்கு விருது கிடைக்கும் எனவும் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் நடிகர்களுக்கு சம்பளம் தராமலே ஏமாற்றுவதாகவும் ஆனால் தயாரிப்பாளர்கள் தானு அப்படி இல்லை எனவும் தனுஷ் குறிப்பிட்டார்.






