இராமநாதபுரத்தில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு நடைபெற்றது

இராமநாதபுரத்தில் நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கம் சார்பில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.நண்டு சதை பதப்படுத்துவோர் சங்க தலைவர் எஸ்.சனில் குமார் வரவேற்றார். தமிழக மீன்வளத் துறை இணை இயக்குநர் சந்திரா துவக்கவுரை ஆற்றினார்.

 

சுற்றுச்சூழல் பாதிப்பின்றி மீன் பிடிக்கும் முறை பற்றி கொச்சின் மத்திய கடல் சார் மீன் ஆராய்ச்சி கூட முதன்மை விஞ்ஞானி முனைவர் சுனில் முகமது, சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்சிஎஸ் குளோபல் பேராசிரியர் பிரமோத் கணபதி ராஜூ ஆகியோர் பேசினர்.

நண்டு சதை பதப்படுத்துவோர் சங்க பொருளாளர் மயில்வாகணன் கூறுகையில், பாக் ஜல சந்தி கடலில் 70 சதவீதம் அளவிற்கு நீல நண்டு பிடிக்கப்படுகிறது. ருசி மிகுந்த நீல நண்டு சதை அமெரிக்கர்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுகிறது. ஆண்டுக்கு 1,800 முதல் 2 ஆயிரம் டன் நீல நண்டு சதை ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தியாவிற்கு ஆண்டுக்கு ரூ.250 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது.

உயிர் நண்டு ஏற்றுமதியால் ஆண்டுக்கு ரூ.100 என மொத்தம் ரூ.350 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பின்றி பிடிக்கப்படும் நீல நண்டுகள் அமெரிக்க மீன் சந்தையில விற்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பின்றி நீல நண்டு கொள்முதல் குறித்து ஏற்றுமதி நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர். நண்டு சதை பதப்படுத்துவோர் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.முருகன் நன்றி கூறினார்.


Leave a Reply