கிரிக்கெட்டில் அரிதுனும் அரிதாக சில மோசமான காயங்களும் சம்பவங்களும் ஏற்படும். வீரர்களுக்கோ அம்பயர்களுக்கோ படுமோசமாகவோ அல்லது தலையிலோ காயம் ஏற்படுவது மிகவும் அரிது. ஆனால் அதுபோன்ற காயங்கள் சில நேரங்களில் சோகமான சம்பவமாக முடிந்துவிடும்.
அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெம்ப்ரோக்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் அம்பயர் ஜான் வில்லியம்ஸ். பெம்ப்ரோக் மற்றும் நார்பெர்த் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த டிவிசன் போட்டிக்கு அம்பயரிங் செய்து கொண்டிருந்த போது, ஜான் வில்லியம்ஸுக்கு தலையில் பந்து பட்டது.
இதையடுத்து அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், கார்டிஃபில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சுயநினைவை இழந்து கோமாவிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.