கவின் மது இடையே எழுந்த சண்டை! மதுவிடம் கோவமாக பேசிய லாஸ்லியா

கவினைப் பற்றி தப்பாக பேசியதால் ஆவேசமடைந்த லாஸ்லியா, மதுவுடன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் பிக் பாஸ் புரொமோவில் இடம் பெற்றுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோவில் கவினும், மதுமிதாவும் சண்டையிட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை ஆண்கள் அடிமைப் படுத்துவதாக அவர் கோபமாகத் தெரிவித்திருந்தார்.

 

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது புரொமோவிலும் கவின், மது சண்டைக் காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதில் கூடுதலாக லாஸ்லியாவும் மதுவை எதிர்த்து சண்டை போடுகிறார்.

 

இந்தப் புரொமோவில் முகென் பிரச்சினையை சிலர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பதாக கவின் கூறுகிறார். அதற்கு, ‘நீ என்னைத் தான் கூறுகிறாயா?’ எனக் கேட்கும் மது, கூடவே ‘நாலு பொண்ணுங்களை ஏமாத்தி இந்த வீட்ல இருக்கணும்ங்கற அவசியம் எனக்கில்லை’ என கத்துகிறார்.

இந்தப் பிரச்சினை அங்கு போய்க் கொண்டிருக்கும் போதே, அங்கு வருகிறார் லாஸ்லியா. கவின் பிரச்சினையில் தானும் சம்பந்தப் பட்டிருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக மதுவிடம் அவர் கோபமாகப் பேசுகிறார். வழக்கம் போல் பேசிக் கொண்டே அங்கிருந்து சென்றும் விடுகிறார். ஆனால் இதுபோல் மற்ற யாரிடமும் அவர் எச்சரிக்கும் விதமாக ஆவேசமாகப் பேசியது இல்லை.

 

பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் தனக்கான பிரச்சினைகளுக்காக மட்டும் தான் லாஸ்லியா தனது குரலை உயர்த்துகிறார். முன்பு மொட்டைக் கடுதாசி டாஸ்க்கின் போது அவர் கோபப்பட்டு பேசினார். ஆனால் இதுவரை எந்த சண்டையிலும் அவர் ஈடுபட்டதில்லை. எனவே முதன்முறையாக அவர் மதுவுடன் மோதி இருப்பது அவரது ஆர்மியை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Leave a Reply