திருவாடானையில் சிறிய வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் வீட்டில் இருந்த பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம். தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே பாரதிநகரில் மண்டபத்திற்கு பின்புறம் சிறிய வீடு ஒன்று இருந்தது.
இந்த வீட்டில் லட்சுமி 50 என்பவர் குடியிருந்து வந்தார் லட்சுமியும் அவரது மகள் மற்றும் இரண்டு பேரனுடன் வசித்து வந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் அந்த வீட்டுக்கு தீ வைத்ததில் தீ மளமளவென எரிந்தது. உடன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் வந்த தீ அணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள்ளாக முழுவதும் எரிந்து வீட்டில் இருந்த அரிசி மிளகாய் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், பாத்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து திருவாடானை காவல்நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளதாக வீட்டின் உரிமையாளர் லட்சுமி தெரிவித்தார்.






