ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடனையில் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி கோவில் ஆடி உற்சவ விழா கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அந்த கோவிலில் பரிவார தெய்வமான மல்லி குடி ஆத்தாள் என்ற சுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் மூலமாக மது பால்குடம் தலையில் ஏந்தி வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை கண்ட பக்தர்கள் பரவசத்தில் குலவையிட்டு கும்பிட்டு வழிபட்டனர். வருகிற வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் பூக்குழி திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!






