காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக அதிகாரிகள், டில்லி சென்றுள்ளனர். தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீர் வழங்க, கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது. முறைப்படி கர்நாடகா நீர் வழங்குகிறதா என்பதையும், ஆணையம் கண்காணிக்க வேண்டும்.ஆணையத்திற்கு தேவையான தகவல்களை, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வழங்க வேண்டும்.
இந்த குழுவில், தமிழகத்தின் சார்பில், காவிரி தொழில்நுட்பபிரிவு தலைவர், சுப்பிரமணியன், திருச்சி மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர், ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.இந்த குழுவின், 14வது கூட்டம், டில்லியில், இன்று நடக்கவுள்ளது.இதில் பங்கேற்பதற்காக, தமிழக அதிகாரிகள், டில்லி சென்று உள்ளனர்.






