சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு முதலிடத்தை தருமபுரி நகராட்சியும், வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநகராட்சி மற்றும் சிறந்த விளங்கும் மூன்று நகராட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு முதல்வர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்வரால் வழங்கப்படும்.
விருது பெறும் மாநகராட்சிக்கு ரூ. 25 லட்சம் ரொக்கப் பரிசும், வாழ்த்து மடலும் வழங்கப்படும்.விருதுக்கு முதலிடத்தில் தேர்வாகும் நகராட்சிக்கு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் நகராட்சிக்கு ரூ. 10 லட்சமும், மூன்றாவது இடத்துக்கு தேர்வாகும் நகராட்சிக்கு 5 லட்சம் ரொக்கப் பரிசுகளுடன் வாழ்த்து மடலும் வழங்கப்படும்.
அந்த வகையில் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த நகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு முதலிடத்தை தருமபுரி நகராட்சியும், வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.