சிவ பெருமானுக்கு ருத்ராபிஷேக விழா

கோவையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது கரங்களால் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்த ருத்ராபிஷேக விழா நடைபெற்றது. வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ருத்ராபிஷேக விழாவானது பொதுமக்கள் தங்களது கரங்களாலே சிவபெருனுக்கு அபிஷேகம் செய்யும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். இது வட இந்தியாவில் மிக முக்கியமான ஒரு விழாவாக கொண்டாட பட்டு வருகிறது.

 

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவண மாதத்தில் சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கோவை ஆர். எஸ் புரத்தில் உள்ள ராஜஸ்தானி மண்டபத்தில் கோவை மாநகர் வளம் பெறவும்,மக்கள் வாழ்வு செழிக்கவும் சிவபெருமானுக்கு மகா ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது.

நடைபெற்ற இந்த அபிஷேக நிகழ்ச்சியில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க 1008 லிட்டர் பசும்பால், தாமரை பூக்கள், தயிர், இளநீர், தேன் உள்ளிட்டவற்றை கொண்டு சிவ பெருமானுக்கு மகா ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும்,பக்தர்கள் தங்கள் கைகளினாலே சிவ பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்த நிகழ்வு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிவ பெருமானை தரிசித்து தரிசித்து சென்றனர்.


Leave a Reply