இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாய் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இராஜசிங்கமங்கலம் கண்மாயை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களுக்கும் இந்த கண்மாய் தான் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. ஆனால் இதன் தற்போதைய நிலை சீமை கருவேல மரங்களாலும் , முறையான பராமரிப்பு இல்லாததாலும் தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது .
இதனை கருத்தில் கொண்டு 28-05-2019 அன்று முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு இணைய வழி கோரிக்கை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் சார்பாக அனுப்பப்பட்டது.
முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கை மனுவில் நூருல் அமீன் கூறியதாவது:
கடுமையான குடிநீர் பஞ்சத்தை தீர்க்க மழை காலத்துக்கு முன் கண்மாயை தூர்வாரி நீர் தேக்க ஆதாரத்தை அதிகரிக்க செய்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த மனு 19-07-2019 அன்று ஏற்கப்பட்டு , சீரமைப்பு பணிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டு பொதுப்பணித்துறையின் மானியக்கோரிக்கையில் 110 விதியின் கீழ் கண்மாய் பராமரிப்பு பணிக்கு ரூ.19 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசாணை மற்றும் நிதி கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற தகவல் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.