காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நாளை தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இன்று டெல்லியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வந்துள்ளது.
கடந்த மே மாதம் ராகுல் காந்தி, காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு செய்யப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.
நாளை டெல்லியில் காங்கிரஸின் செயற்குழு கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்தான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் அக்கட்சியின் தலைவராக 20 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
134 ஆண்டுகள் வரலாறு கொண்ட காங்கிரஸுக்கு, நேரு – காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அதிக காலம் தலைவராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.